×

இரவில் பெய்த திடீர் கனமழை கடையநல்லூர் அருகே வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது

கடையநல்லூர்,ஜன.3: கடையநல்லூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவில் திடீரென இடி மின்னலுடன் கன மழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதில் கடையநல்லூரை அடுத்த சுந்தரேசபுரம் காலனி பகுதியில் சுமார் 15 வீடுகள் உள்ளது. இப்பகுதியில் வாறுகால் வசதி இல்லாததாலும், பள்ளமான பகுதியாக இருப்பதாலும் சாலையில் சென்ற மழை நீர் திடீரென குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. இதனால் அப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இப்பகுதியில் ஒவ்வொரு நாள் மழை பெய்யும் போது வீடுகளுக்குள் தண்ணீர் புகுவது தொடர்கதையாகி வருகிறது. எனவே இப்பகுதியில் வாறுகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றும், தற்போது தேங்கியுள்ள மழை நீரை அகற்ற சம்பந்தப்பட்டத்துறையினர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kadayanallur ,
× RELATED சங்கரன்கோவில் நகராட்சி 1வது வார்டில்...