- மணமதுரை நகராட்சி கூட்டம்
- மானாமதுரை
- மாரியப்பன் கென்னடி
- துணை ஜனாதிபதி
- பாலசுந்தரம்
- நகராட்சி ஆணையர்
- கோபாலகிருஷ்ணன்
- மானாமதுரை நகராட்சி
மானாமதுரை, ஜன.3: மானாமதுரை நகராட்சி கூட்டம் தலைவர் மாரியப்பன் கென்னடி தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் பாலசுந்தரம் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையாளர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர்கள் கடந்த சில மாதங்களாக மானாமதுரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் போடப்படும் தார் மற்றும் சிமென்ட் சாலைகளை தரமான சாலையாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். வார்டுகளில் கழிவுநீர் கால்வாய்களில் தேங்கியுள்ள மண்ணை அகற்ற வேண்டும். காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். கூட்டத்தில் வார்டு கவுன்சிலர்கள், நகராட்சி பொறியாளர் பட்டுராஜன், மேலாளர் பாலகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
