×

சிறை கைதி திடீர் மரணம்

புழல், ஜன.3: புழல் விசாரணை சிறையில் சுமார் 3,000க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இதில் மாதவரம் போத்தராஜா கோயில் தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் (52). இவர், புழல் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரால், பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த டிசம்பர் 24ம் தேதி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவருக்கு, ேநற்று சிறையில் வலிப்பு மற்றும் மாரடைப்பு ஏற்படதால், உடனடியாக அவரை மீட்ட ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

Tags : Caterpillar ,Maggot Trial Prison ,Aorkiraj ,Madhavaram Bodharaja Temple Street ,Worm All Women's Police Station police ,
× RELATED சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில்...