- சிவகங்கை
- செம்புலம் இலக்கிய வட்டம்
- ஆங்கிலப் புத்தாண்டு
- பிரபாகரன் சிங்கம்பிடாரி
- கவிஞர் காளிராஜா
- டிஎம்யூ…
சிவகங்கை, ஜன. 3: சிவகங்கையில் செம்புலம் இலக்கிய வட்டம் சார்பில் ஆங்கில புத்தாண்டையொட்டி இலக்கிய கூடுகை மற்றும் உரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அமைப்பின் நிறுவனர் கவிஞர் பிரபாகரன் சிங்கம்பிடாரி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். புலவர் காளிராசா முன்னிலை வகித்தார். தமுஎகச மாவட்ட தலைவர் சிபூ, கதிர் நம்பி, கவிஞர் செல்லப்பாண்டி வாழ்த்துரை வழங்கினர். சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது பெற்ற எழுத்தாளர் லட்சுமிஹர் சிறப்புரையாற்றினார். இதில் சமகால இலக்கிய செயல்பாடு, வாசிப்பு மரபு, நூல் விமர்சனம், உரையாடல், கலை கலாசார வெளிப்பாடுகள் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது. தொடர்ந்து கவிதை வாசிப்பு, கதை சொல்லல் நிகழ்ச்சி நடந்தது. குறும்படம் திரையிடப்பட்டது. இதில் கவிஞர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள், இளைஞர்கள், மாணவர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை பவதாரணி தொகுத்து வழங்கினார். கவிஞர் செல்லப்பாண்டி நன்றி கூறினார்.
