- திமுக செயற்குழு
- தர்மபுரி
- கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு
- தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க
- ஏ. மணி
- தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு
தர்மபுரி, ஜன.3: தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் இன்று (3ம் தேதி) காலை நடக்கிறது. இதுகுறித்து தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஆ.மணி எம்.பி., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் இன்று (3ம் தேதி) காலை 10.30 மணிக்கு, மாவட்ட கட்சி அலுவலகத்தில் உள்ள தளபதியார் அரங்கில், தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் செல்வராஜ் தலைமையில் நடக்கிறது. அதுசமயம் முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர், திமுக செயலாளர்கள், கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் தலைவர்கள், துணை தலைவர்கள், அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இக்கூட்டத்தில், தைத் திங்கள் தமிழர் திருநாள் திராவிட பொங்கல் சமூக நீதிக்கான திருவிழா கொண்டாட்டம் குறித்தும், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த சீராய்வு குறித்தும், திமுக ஆக்கப்பணிகள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
