ராயக்கோட்டை, ஜன.1: ராயக்கோட்டை நகருக்குள் கனரக வாகனங்கள் வந்து செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஓசூர்- தர்மபுரி 4 வழிச்சாலை பணிகள், கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. பணிகள் மிகவும் மந்த கதியில் நடைபெற்று வருவதால், 4 வழிச்சாலையில் செல்ல வேண்டிய கார், பஸ், லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் அனைத்தும், ராயக்கோட்டை நகருக்குள் நுழைந்து செல்கிறது.
நகரில் சாலைகள் மிகவும் குறுகலாக இருப்பதால், நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடிவதில்லை. அதனால் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. பொதமக்களும் சாலைகளை கடக்க நீண்ட நேரம் நிற்க வேண்டியுள்ளது. நான்கு வழிச்சாலை பணிகளை விரைந்து முடித்தால் மட்டுமே, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும். எனவே, 4 வழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.
