ஊட்டி : தமிழ்நாடு வனத்துறை சார்பில் ஆண்டுதோறும் ஈரநிலை பறவைகள் கணக்கெடுப்பு மற்றும் நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு என இரண்டு பிரிவாக கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
நடப்பு ஆண்டில் இதன் முதல் கட்டமாக ஈரநிலை பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் நேற்று முன்தினம் துவங்கியது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள நீலகிரி மற்றும் கூடலூர் வன கோட்டங்கள், முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கணக்கெடுக்கும் பணி நடந்தது. நேற்று முன்தினம் பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
கூடலூர் வன கோட்டத்தில் 60 வனப்பணியாளர்கள் மற்றும் 25 தன்னார்வலர்கள் கலந்துகொண்டு 21 இடங்களில் ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு மேற்கொண்டனர். இதேபோல் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள ஊட்டி கோட்டத்திற்கு உட்பட்ட 4 வனச்சரகங்களில் ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு நடந்தது.
