×

டபிள்யுடிசி புள்ளி பட்டியல் இங்கிலாந்து முன்னேற்றம்

லண்டன்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான, ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வரலாற்று சிறப்பு வாய்ந்த வெற்றியை பதிவு செய்தது. அதையடுத்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் (டபிள்யுடிசி) இங்கிலாந்து அணியின் வெற்றி விகிதத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

டபிள்யுடிசி சமீபத்திய புள்ளிப் பட்டியலில், ஆஸ்திரேலியா 85.71 சதவீத வெற்றிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. நியூசிலாந்து 77.8 சதவீத வெற்றியுடன் 2, தென் ஆப்ரிக்கா 75 சதவீத வெற்றியுடன் 3வது இடங்களில் உள்ளன. இந்தியா, 48.15 சதவீத வெற்றியுடன் 6வது இடத்தில் நீடிக்கிறது. இங்கிலாந்து அணி, 35.19 சதவீத வெற்றியுடன் 7ம் இடத்தை பெற்றுள்ளது.

Tags : England ,WTC ,London ,Ashes ,Australia ,World Test Championship ,
× RELATED 14 சிக்சருடன் 157 ரன் சர்ப்ராஸ் கானின்...