கருங்கல், டிச.27: கருங்கல் அருகே கோவில்விளை பகுதியை சேர்ந்தவர் அபினேஷ் (26). இருச்சக்கர வாகன கன்சல்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று ெதாழிலாளியான அபினேஷின் சித்தப்பா டேவிட் ராஜ் நெல்லிக்காட்டு விளை பகுதியில் நின்று கொண்டு இருந்த போது அங்கு வந்த 2பேர் டேவிட்ராஜை பார்த்து அவதூறாக பேசியுள்ளனர். டேவிட்ராஜ் தட்டி கேட்டபோது அவரை சரமாரியாக தாக்கினர்.இது
குறித்து அபினேஷ் அளித்த புகாரின் பேரில் கருங்கல் போலீசார் கிறிஸ்துராஜ், சபர் ஜேம்ஸ் ஆகிய இருவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
