விசிக ஆர்பாட்டம் வேளாண் சட்டத்தை கண்டித்து

வேலூர், ஜன.22: வேலூரில் வேளாண் சட்டத்தை கண்டித்து விசிகவினர் நேற்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். வேலூர் அண்ணாகலையரங்கம் அருகே விசிக கட்சியினர் சார்பில் நேற்று ஆர்பாட்டம் நடந்தது. ஆர்பாட்டத்தில், மாவட்ட துணை செயலாளர் இளங்கோ தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் சந்திரகுமார், அணைக்கட்டு தொகுதி செயலாளர் கோட்டி என்கிற கோவேந்தன் முன்னிலை வகித்தார். மாநில கொள்கை பரப்பு செயலாளர் சந்தர் கலந்துகொண்டு பேசினார். ஆர்பாட்டத்தில், வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரியும், குறைந்த பட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய கோரியும் கோஷமிட்டனர். இதில் விசிக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories:

>