×

விக்டோரியா பொது அரங்கம் சென்னையின் வரலாற்று சின்னத்துக்கு புத்துயிர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: விக்டோரியா பொது அரங்கம் – சென்னையின் வரலாற்றுச் சின்னத்துக்குப் புத்துயிர்! நாடு போற்றும் நமது திராவிட மாடலின் ஆதிவிதையான நீதிக்கட்சி தொடக்கம், சென்னையில் முதல் திரைப்படத் திரையிடல், தேசிய தலைவர்களின் உரைகள் ஒலித்தது என எத்தனையோ பெருமைகளைக் கொண்ட விக்டோரியா பொது அரங்கத்தைத் தொன்மை மாறாமல் புதுப்பித்துத் திறந்து வைத்துள்ளோம்!

சென்னை நகரின் பல நினைவுகளை மீண்டும் உயிர்ப்பித்து நம் கண்முன் நிறுத்தும் கண்காட்சியும் சிந்தையைக் கவர்ந்தது! மேலும், ரிப்பன் மாளிகை வளாகத்தில் கட்டப்படவுள்ள பெருநகர சென்னை மாநகராட்சியின் புதிய மன்றக்கூடத்திற்கும் அடிக்கல் நாட்டினேன். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Tags : Victoria Public Hall ,Chennai ,Chief Minister ,M.K. Stalin ,Justice Party ,
× RELATED நிதிச்சுமை ஏற்பட்டாலும் நிறைய...