தரங்கம்பாடி: தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை அருங்காட்சியகத்தில் 13ம் நூற்றாண்டு போர்வாள் திருட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த அருங்காட்சியகத்தில் டேனிஷ் காலத்து 13ம் நூற்றாண்டு பொருட்களும், டேனிஷ் போர்ப்படை ஆயுதங்களும், சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. டேனிஷ் காலத்து போர்வாள் இரண்டு கண்ணாடி பேழைக்குள் வைத்து பொதுமக்களின் பார்வைக்கு வைக்கபட்டிருந்தது.
இரண்டு வாளில் ஒரு வாள் கடந்த 24ம் தேதி காணவில்லை. டேனிஷ் கோட்டை பணியாளர்கள் தேடி பார்த்தும் கிடைக்காத நிலையில் அந்த வாள் திருடப்பட்டிருக்கும் என தெரியவந்தது. இது குறித்து தொல்லியல்துறை பொறையார் போலீசில் புகார் அளித்தது. பொறையார் போலீசார் வழக்கு பதிவு செய்துபோர் வாளை திருடிய மர்ம நபரை வலை வீசி தேடி வருகின்றனர்
