- டெல்டா மாவட்டங்கள்
- வளிமண்டலவியல் திணைக்களம்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை வளிமண்டலவியல் திணைக்களம்
சென்னை: தமிழகத்தில் கடுமையான பனிப்பொழிவு நிலவும் நிலையில், டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் மலைப்பகுதிகளில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை சென்னை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, அடுத்த இரு தினங்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் (திண்டுக்கல் மாவட்டம்) ஓரிரு இடங்களில் இரவு நேரங்களிலும், அதிகாலை வேளையிலும் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.
நாளைய தினம் பொருத்தவரை, டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பொருத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
