விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே பரவளூர் கிராமத்தில் 5 சவரன் நகைக்காக மூதாட்டி அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். விவசாய நிலத்தின் அருகே கணவர் சின்னசாமி, மனைவி கஸ்தூரி தனியாக வீடு கட்டி வசித்து வருகின்றனர். அதிகாலையில் மாட்டு கொட்டகையில் பால் கறக்க சென்ற கஸ்தூரியை பின்தொடர்ந்து சென்று மர்மநபர்கள் கொலை செய்தனர்.
