திருத்துறைப்பூண்டி,டிச.24: தென்னை பயிரில் பிரதான ஊட்டச்சத்து குறைபாடாக இருப்பது போரான் சத்தாகும். இதனை நிவர்த்தி செய்யும் வழிமுறை குறித்து திருத்துறைப்பூண்டி வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் இளவரசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:புதிதாக உருவாகும் இளம் இலைகள் சிறயதாக இருக்கும். சிற்றிலைகள் வடிவம் மாறி காணப்படும்.
இனப்பெருக்க மண்டலம் உருமாற்றம் அடைகிறது. காய்கள் உதிர்தல் அதிகமாக இருக்கும். குறைவான மற்றும் இயற்கைக்கு மாறான பழங்கள் உருவாகிறது. போராக்ஸ் 0.2 முதல் 0.5 கிகி மரம், வருடத்திற்கு மண்ணில் அளிக்க வேண்டும். அல்லது போராக்ஸ் 0.2% இலைத் தெளிப்பாக அளிக்க வேண்டும். மேலும் வேளாண்மை டெப்போக்களில் கிடைக்கும் தென்னை நுண்ணூட்டக் கலவை மரத்திற்கு ஒரு கிலோ வீதம் இடுவதன் மூலம் நிவர்த்தி செய்ய முடியும் என்றார்.
