×

அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்

ஆவடி, டிச.24: தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வருடந்தோறும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பு கல்வியாண்டில் (2025-2026) திருவள்ளூர் மாவட்டம் ஆவடி செக்போஸ்ட் அருகே அரசு உதவி பெறும் பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கலந்து கொண்டு 556 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், ஆவடி மாநகராட்சி மேயர் ஜி.மேயர்குமார், துணை மேயர் சூரியகுமார், பள்ளி தலைமை ஆசிரியர், பகுதி செயலாளர், பள்ளி கல்வி துறை அதிகாரிகள், கழக நிர்வாகிகள், வட்டக் கழக செயலாளர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Avadi ,Tamil Nadu ,Tiruvallur ,
× RELATED வடசென்னை அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு