×

இந்தியர்கள் அதிகம் பேர் சுற்றுலா செல்ல முன்பதிவு செய்த 10 நாடுகளில் தாய்லாந்து முதலிடம்..!!

இந்தியர்கள் அதிகம் பேர் சுற்றுலா செல்ல முன்பதிவு செய்த 10 நாடுகளில் தாய்லாந்து முதலிடத்தை பிடித்துள்ளது. தாய்லாந்து முதலிடம்: சுற்றுலாத் துறையில் தென்கிழக்கு ஆசியாவில் மிகவும் விரும்பப்படும் இடமாகவும், இந்தியர்களுக்குப் பிடித்த விடுமுறை இடமாகவும் உள்ளது; மேலும் மின்னணு மற்றும் வாகன ஏற்றுமதியிலும் உலகளவில் முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக, 2025ம் ஆண்டின் இறுதி விடுமுறைப் பயணங்களில் இந்தியப் பயணிகளுக்கு அதிகம் முன்பதிவு செய்யப்பட்ட நாடுகளில் தாய்லாந்து முதல் இடத்தில் உள்ளது.

UAE இரண்டாவது இடம்: உலகளாவிய நாடுகளில் பயணம், வாழ்வு மற்றும் வேலை செய்ய உலகின் மிகவும் விரும்பப்படும் இடங்களில் ஒன்றாக ஐக்கிய அரபு அமீரகம் தொடர்ந்து நிலைத்து நிற்கிறது. அந்தவகையில், 2025 ஆம் ஆண்டில் மட்டும், விசிட் விசாக்கள் மற்றும் நீண்டகால ரெசிடென்சி திட்டங்களில் பல முக்கிய மாற்றங்களை ஐக்கிய அரபு அமீரகம் அறிமுகப்படுத்தியது. மேலும் இந்தியர்கள் அதிகம் பேர் சுற்றுலா செல்ல முன்பதிவு செய்த இடங்களில் UAE இரண்டாவது இடத்தில் உள்ளது.

இலங்கை மூன்றாவது இடம்: இந்தியப் பயணிகளுக்கான முன்பதிவுகளில் 2025-ல் இலங்கை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஆனால், 2025-ன் குளிர்காலப் பயணங்களில், இந்தியப் பயணிகளின் முன்பதிவுகள் 5 மடங்கு அதிகரித்துள்ளன. அழகிய கடற்கரைகள், மலிவு விலை, குறுகிய பயண நேரம், கலாச்சார பாரம்பரியம் ஆகியவை இலங்கை பயணத்திற்கான முக்கிய காரணங்கள். பல பயண நிறுவனங்கள், இலங்கையைத் தேனிலவு மற்றும் திருமண வைபவங்களுக்குச் செல்ல சிறந்த நாடுகளில் ஒன்றாகக் குறிப்பிடுகின்றன. பிரபல இடங்கள்: கொழும்பு, காலி, நுவரெலியா, கண்டி, பெந்தோட்டா, ஹிக்கடுவா, மிரிஸ்ஸா ஆகிய பகுதிகள் பிரபலமான பகுதிகளாக அமைந்துள்ளது.

 

Tags : Thailand ,Southeast Asia ,
× RELATED உக்ரைனுக்கு உதவிய ஸ்டார்லிங்...