சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சதுக்கம் பேருந்து நிலையத்தின் பின்புறத்தில் 2400 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ள வீடற்றவர்களுக்கான இரவு நேர காப்பகத்தை இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். டைல்ஸ் பதிக்கப்பட்ட தரை, கழிப்பறை, மின்விசிறி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் சென்னை மாநகராட்சி அமைத்துள்ளது. சுமார் 86 பேர் ஒரே நேரத்தில் தங்கவும், அவர்களுக்கு தேவையான பாய், தலையனை மற்றும் போர்வை உள்ளிட்டவைகளும் வழங்கப்பட்டன.
