சென்னை: புதிய சட்டத்தின்படி 125 நாட்கள் வேலை வழங்க இருப்பதாக பாஜகவினர் தங்களை தாங்களே பாராட்டிக் கொள்கிறார்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். 100 நாட்கள் வேலை உத்தரவாதம் கட்டாயம் என்று சட்டம் இருந்தபோதே, மக்களுக்கு 20 நாட்கள் வேலை கிடைத்தது. தற்போது அதிகாரிகள் விரும்பினால் வேலை வழங்கலாம் என்று விதிகள் மாற்றப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
