×

வெள்ளகோவிலில் ரூ.45.65 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்

வெள்ளகோவில், டிச.18: வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் வெள்ளகோவில் வேலம்பட்டி, மாயனூர், பெரியத்தி பாளையம், வாணியம்பாடி, விளாத்திகுளம், வில்வாதம் பட்டி,முத்தூர் பகுதி விவசாயிகள் 75 பேர், 29 ஆயிரம் கிலோ எடை கொண்ட தேங்காய் பருப்பை கொண்டு வந்திருந்தனர்.. கண்காணிப்பாளர் மகுடேஸ்வரன் முன்னிடையில் நடைபெற்ற இதில் தரமான முதல் தர பருப்பு அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.218.89 ரூபாய்க்கும், இரண்டாம் தரம் ஒரு கிலோ ரூ.122.68 ரூபாய்க்கும் ஏலம் நடைபெற்றது. மொத்தம் 45 லட்சத்து 65 ஆயிரத்துக்கு வர்த்தகம் நடைபெற்றது.

Tags : COCONUT PULP ,VELAKOVIL ,Velampatti ,Mayanur ,Peryathi ,Palayam ,Vaniyampadi ,Vlathikulam ,Vilwadam Patti ,Muttur ,Regulatory Sales Hall ,Velako ,
× RELATED திடக்கழிவு மேலாண்மை ஆலோசனை கூட்டம்