×

கலைஞர் அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு தலா ரூ.25000 நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: திமுக தலைமை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக, கலைஞர் தனது சொந்த பொறுப்பில் அளித்த ரூ.5கோடியை வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டு, அதில் கிடைக்கப்பெறும் வட்டித் தொகையினைக் கொண்டு, மாதந்தோறும் ஏழை எளிய நலிந்தோர்க்கு உதவித் தொகையாக 2005 நவம்பர் மாதம் முதல் 2007 ஜனவரி மாதம் வரை வழங்கப்பட்டு வருகிறது. வைப்பு நிதியாக போடப்பட்ட ரூ.5 கோடியில், 30வது புத்தகக் கண்காட்சியினை 2007 ஜனவரி 10ம்தேதி திறந்து வைத்து கலைஞர் பேசுகையில், ‘கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்-பதிப்பாளர் சங்கத்துக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும்’ என அறிவித்து அச்சங்கத்துக்கு வழங்கியது போக மீதமுள்ள ரூ.4கோடியிலிருந்து வரும் வட்டித் தொகையில் 2007 பிப்ரவரி முதல் தொடர்ந்து உதவித் தொகை வழங்கப்படுகிறது. 2005 நவம்பர் முதல் இதுவரை வழங்கிய நிதி ரூ.6 கோடியே 37 லட்சத்து 90 ஆயிரம். இந்த மாதம் நலிந்தோர் மற்றும் மருத்துவ உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2,00,000 நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். நிதி பெறுவோர் வெளி மாவட்டங்களிலிருந்து வந்துபோகிற செலவினத்தை தவிர்ப்பதற்காக தபால் மூலம் வரைவுக் காசோலையாக அனுப்பப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Kalaignar Foundation ,Chennai ,DMK ,Kalaignar ,Kalaignar Karunanidhi Foundation ,
× RELATED முத்திரை திட்டங்களின் (Iconic Projects)...