×

வாலிபர் கொலையில் குண்டாசில் 5 பேர் கைது

 

சிவகங்கை,டிச.3: சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் வாலிபரை கொலை செய்த வழக்கில் 5பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
சிவகங்கை பிள்ளைவயல் ஆர்ச் பகுதியை சேர்ந்தவர் பாக்யராஜ் மகன் ராஜேஸ்(20). கடந்த மாதம் 1ம் தேதி இரவு சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் பஸ்சுக்காக காத்திருந்தபோது ராஜேஷை ஒரு கும்பல் வெட்டி படுகொலை செய்தது. இச்சம்பவம் குறித்து சிவகங்கை நகர் போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து 9 பேரை கைது செய்தனர். இதில் சிவகங்கை தொண்டி ரோட்டை சேர்ந்த அருண்பாண்டி(23), சோழபுரத்தைச் சேர்ந்த ஐயப்பன் (21), விஜய்(21), சிவகங்கை கோர்ட் வாசல் பகுதியைச் சேர்ந்த குணா(19), சிவகங்கை திருவள்ளுவர் தெருவை சேர்ந்த சரவணன்(19), ஆகிய 5 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்பி சிவப்பிரசாத் கலெக்டர் பொற்கொடிக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் உத்திரவிட்டதையடுத்து 5 பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

 

Tags : Sivaganga ,Rajesh ,Bhagyaraj ,Sivaganga Pillavayal Arch ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...