×

ஆவடியில் ரயில் மோதி ஒருவர் பலி

ஆவடி: ஆவடி – இந்து கல்லூரி தண்டவாளத்துக்கு இடையே 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆவடி ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்காக அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், இறந்தவர் நேற்று அதிகாலை தண்டவாளத்தை கடந்த போது, அரக்கோணம் மார்க்கமாக சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு இறந்தது தெரிய வந்தது. இவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Tags : Avadi ,Hindu College ,Avadi railway police ,
× RELATED மாவட்டம் முழுவதும் மழையால் சேதமான சாலைகள் சீரமைப்பு