சிவகாசி: புதிய தமிழகம் கட்சி மாநாடு ஜனவரி மாதம் மதுரையில் நடைபெறுகிறது. இதற்கு ஆதரவு திரட்டுவதற்கு அக்கட்சி நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் கடந்த நவ.25ம் தேதி விதிமுறைகளை மீறி இரவு 11.40 மணி வரை சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்க அனுமதி கோரி சிவகாசி நீதிமன்றத்தில் மாரனேரி எஸ்ஐ அருண்பாண்டியன் மனு தாக்கல் செய்தார். நீதிமன்ற உத்தரவுப்படி கிருஷ்ணசாமி மற்றும் விருதுநகர் மத்திய மாவட்ட செயலாளர் கனிப்பாண்டியன், சிவகாசி ஒன்றிய செயலாளர் முருகன் உட்பட 8 பேர் மீது மாரனேரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
