மதுக்கரை: கோவை மாவட்டம், மதுக்கரை அருகே, சேலம், கொச்சின் பைபாஸ் ரோட்டிலுள்ள, க.க.சாவடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட எட்டிமடை சோதனைச்சாவடியில், நேற்று மதியம் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த பைக்கில் வந்த காந்தி நகர் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமாரிடம் (34) சோதனை செய்தததில்கட்டுக்கட்டாக ரூ.30 லட்சம் பணம் இருந்தது. அதற்கான ஆவணங்கள் இல்லாததால், ரூ.30 லட்சம் மற்றும் பைக்கை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
