×

பெரியார் திடல், அண்ணா அறிவாலயம் இணைந்து விரட்ட வேண்டிய பல ஆபத்துகள் தமிழ்நாட்டை சுற்றி வட்டமடிக்கின்றன: முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவு

சென்னை: பெரியார் திடலும், அண்ணா அறிவாலயமும் இணைந்து விரட்ட வேண்டிய பல ஆபத்துகள் தமிழ்நாட்டைச் சுற்றி வட்டமடித்துக் கொண்டே இருக்கின்றன என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திராவிடர் கழகத் தலைவர் வீரமணி பிறந்தநாளையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ்தள பதிவு: தொடரட்டும் ஆசிரியர் தொண்டறம், தமிழ் மக்கள் நலமே தமது நலமாய், சமூகநீதி காப்பதே தன் வாழ்க்கைக் கடமையாய்ச் செயல்படும் மூப்பினை வென்ற மூவாப் போராளி ஆசிரியர் வீரமணிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். பெரியார் திடலும், அண்ணா அறிவாலயமும் இணைந்து விரட்ட வேண்டிய பல ஆபத்துகள் தமிழ்நாட்டைச் சுற்றி வட்டமடித்துக் கொண்டே இருக்கின்றன. பெரியாரியத் தடியும், பேரறிஞரின் மதியும், முத்தமிழறிஞரிடம் கற்ற உழைப்பும் கொண்டு திராவிட மாடல் நல்லாட்சி நிலைக்கச் செய்வோம், ஆசிரியர் அறிவுரைகளோடு தமிழ்நாட்டைத் தொடர்ந்து காப்போம். இவ்வாறு முதல்வர் எக்ஸ்தள பதிவில் கூறியுள்ளார்.

Tags : Tamil Nadu ,Periyar ,Thidal ,Anna Arivalayam ,Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Periyar Thidal ,Dravidar ,Kazhagam ,Veeramani ,
× RELATED பெருந்துறையில் விஜய் இன்று பிரசாரம்:...