×

நியூயார்க்கில் நடந்த விருது வழங்கும் விழா; சிவப்பு கம்பளத்தில் ஜொலித்த நட்சத்திரங்கள்: விருதுகளை வென்று குவித்த ஹாலிவுட் நடிகைகள்

நியூயார்க்: நியூயார்க்கில் நடைபெற்ற 35வது கோதம் திரைப்பட விருது விழாவில் ஹாலிவுட் முன்னணி நடிகைகள் பங்கேற்று விருதுகளைப் பெற்றுக்கொண்டனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள சிப்ரியானி வால் ஸ்ட்ரீட் பகுதியில், 35வது கோதம் திரைப்பட விருது வழங்கும் விழா நேற்று இரவு வெகு விமரிசையாக நடைபெற்றது. உலகத் திரைப்பட விருதுகள் வழங்கும் சீசனின் தொடக்கமாகக் கருதப்படும் இந்த விழாவில், ஹாலிவுட் திரையுலகின் முக்கியப் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவின் சிறப்பம்சமாக ஜெனிபர் லாரன்ஸ், கேட் ஹட்சன் மற்றும் ஜூலியா ராபர்ட்ஸ் உள்ளிட்ட முன்னணி நடிகைகள் சிவப்பு கம்பள வரவேற்பில் கலந்து கொண்டு விழாவை அலங்கரித்தனர்.

இந்த விழாவில், ‘ஆஃப்டர் தி ஹன்ட்’ திரைப்படத்தில் சிறப்பான பங்களிப்பை அளித்ததற்காக நடிகை ஜூலியா ராபர்ட்ஸிற்கு ‘விஷனரி டிரிப்யூட்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. அதேபோல் ‘சாங் சங் ப்ளூ’ திரைப்படத்திற்காக நடிகை கேட் ஹட்சன் மற்றும் நடிகர் ஹியூ ஜாக்மேன் ஆகியோருக்கு இசைக்கான சிறப்பு விருது (மியூசிக்கல் டிரிப்யூட்) வழங்கப்பட்டது. மேலும் ‘டை மை லவ்’ படத்தில் நடித்ததற்காகச் சிறந்த முன்னணி நடிகருக்கான பிரிவில் நடிகை ஜெனிபர் லாரன்ஸ் பரிந்துரைக்கப்பட்டார். விருது வென்ற நட்சத்திரங்களுக்குத் திரையுலகினரும் ரசிகர்களும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Tags : Awards ,New York ,35th Gotham Film Awards ,35th Gotham Film Awards ceremony ,Cipriani Wall Street ,New York City, USA… ,
× RELATED சிறையில் இருக்கும் பாகிஸ்தான்...