- விஜய்
- எம்.ஜி.ஆர்
- செங்கோட்டையன்
- நைனார் நாகேந்திரன்
- வருணநாடு
- பாஜக
- அஇஅதிமுக
- Kadamalaikundu
- ஆண்டிபட்டி, தேனி மாவட்டம்
வருசநாடு: எம்ஜிஆர் வழி வேறு, விஜய் வழி வேறு என்பது கூட செங்கோட்டையனுக்கு தெரியாதா என பாஜ மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே கடமலைக்குண்டுவில் நடைபெற்ற அதிமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில், பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘எம்ஜிஆர் வழியில் விஜய் செயல்படுவதாக செங்கோட்டையன் கூறியுள்ளார்.
இதைவிட வேடிக்கையான விஷயம் எதுவும் இல்லை. 50 ஆண்டு கால அரசியல் அனுபவம் கொண்ட செங்கோட்டையன் இவ்வாறு கூறுவது வியப்பாக உள்ளது. எம்ஜிஆரின் வழியும், கொள்கையும் வேறு, விஜயின் வழியும் கொள்கையும் வேறு. இதுகூட செங்கோட்டையனுக்கு தெரியாதா?’’ என்று கூறினார். ‘‘தேனியில் போட்டியிடுவீர்களா’’ என்ற கேள்விக்கு, ‘‘ ஏற்கனவே நிறைய வேட்பாளர்கள் இருக்கிறார்கள். நானும் வந்தால் என் மீது கோபம் கொள்வார்கள்’’ என்றார்.
