×

கோவாவில் 90ஆயிரம் வாக்காளர் பெயர் நீக்கம்

 

 

பனாஜி: கோவாவில் நடந்து வரும் சிறப்பு தீவிர திருத்தத்தில் 90ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படும் என்று மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். கோவாவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மாநில தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சய் கோயல் கூறுகையில், ‘‘கடந்த 4ம் தேதி தொடக்கத்தில் வழங்கப்பட்ட தரவுகளின்படி கோவாவில் மொத்தம் 11,85,000 வாக்காளர் உள்ளனர். தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்ட விரிவான சிறப்பு தீவிர திருத்தத்தின் விளைவாக 10,55,000 படிவங்கள் நிரப்பப்பட்டு இந்த படிவங்களில் 96.5 சதவீதம் தேர்தல் ஆணையத்தால் பெறப்பட்டுள்ளன.

90ஆயிரம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லாதவர்கள், இடம் பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள் அல்லது நகல் வாக்காளர்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர். சுமார் 40ஆயிரம் கணக்கெடுப்பு படிவங்கள் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்படாமல் உள்ளன. டிசம்பர் 20ம் தேதி நடக்கும் மாவட்ட பஞ்சாயத்து தேர்தலுக்கு புதிய வரைவு வாக்காளர் பட்டியல் பொருந்தாது. தற்போது வாக்காளர் பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ள எவரும் தங்களது வாக்குரிமையை பயன்படுத்தலாம்” என்றார்.

Tags : Goa ,Panaji ,Chief Electoral Officer… ,
× RELATED சிறையில் இருக்கும் பாகிஸ்தான்...