×

எஸ்ஐஆர் பணியில் பல சிக்கல்கள் இன்னும் தீர்க்கப்படவில்லை; உச்ச நீதிமன்றத்தில் 4ம் தேதி எங்கள் வாதத்தை எடுத்து வைப்போம்: திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ பேட்டி

சென்னை: திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்பி நேற்று அளித்த பேட்டி:
எஸ்.ஐ.ஆர் நடைமுறையும் அதன் கால அளவீடுகளும் நடைமுறைக்கு உதவாதவை என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்தார். முதல்வர் வழிகாட்டுதலின் பெயரில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது, ஜனநாயக முறையில் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் இணைந்து அறப்போராட்டம் நடத்தினோம், இருந்தாலும் கூட களத்திலிருக்கும் எந்த ஒரு வாக்காளருடைய வாக்கும் நீக்கப்படக்கூடாது என்பதற்காக திமுகவினுடைய பிஎல்ஏக்கள் தீவிரமாக பணியாற்றினார்கள்.

சென்னையில் 55 சதவீதம் மட்டும்தான் கணினி மயமாக்கப்பட்டிருக்கிறது. எத்தனை படிவங்கள் அல்லது எத்தனை சதவீத படிவ செல்வங்கள் திரும்ப பெறப்பட்டன என்ற கணக்கை தேர்தல் ஆணையம் தரவே இல்லை எவ்வளவு கொடுத்தோம் என்று சொல்கிறார்கள் எவ்வளவு கணனி மயப்படுத்தினோம் என்று சொல்கிறார்கள் எவ்வளவு திரும்ப பெற்றோம் என்பதை மட்டும் சொல்லவே இல்லை. இதன் மூலம் பல வாக்காளர்களுடைய வாக்குகளை நீக்கிவிடும் அச்சம் இருக்கிறது.

மேலும் பெறப்பட்ட படிவங்களை கணினி மயமாக்குவதில் மிகுந்த காலத்தாமதம் ஏற்படுதாக நாங்கள் உணர்ந்தோம்; அதனால்தான் மீண்டும் மீண்டும் இந்த கால அட்டவணை சரியானது அல்ல என்பதை வலியுறுத்தி வந்தோம்; மேலும் பருவமழை காரணமாக இந்த பணிகள் பாதிக்கக்கூடிய வாய்ப்புகள் நிறைய இருக்கிறது என்பதையும் சுட்டி காட்டினோம்; அதற்கு ஏற்றார் போல் தற்போது வந்திருக்கக்கூடிய புயலும் அந்த பணிகளை பாதிக்க கூடியதாக இருக்கிறது.

இந்த நிலையில் தேர்தல் ஆணையம் திமுகவிடைய அந்த நியாயமான வாதத்தை ஏற்று ஒரு வார காலத்திற்கு இந்த கணக்கீட்டு காலத்தை நீட்டித்திருக்கிறது அது உண்மையிலேயே திமுகவிற்கும் அதனுடைய ஜனநாயக போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. இருந்தாலும் கூட இந்த எஸ்ஐஆர் பணியில் பல சிக்கல்கள் இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கின்றன. அவற்றையெல்லாம் எடுத்துச் சொல்லி உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் 4ம் தேதி எங்களுடைய வாதத்தை எடுத்து வைக்க இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Supreme Court ,DMK ,Law Secretary ,N.R. Ilango ,Chennai ,Chief Minister ,M.K. Stalin ,
× RELATED பறக்கும் விமானத்தில் மயங்கி விழுந்த...