×

இஸ்ரேல் துப்பாக்கிச் சூட்டில் 2 பாலஸ்தீன குழந்தைகள் பலி

டெய்ர் அல்-பலாஹ்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் அக்டோபர் மாதம் 10ம் தேதி அமலுக்கு வந்தது. எனினும் அவ்வப்போது இஸ்ரேல் வீரர்கள் காசா மீது தாக்குதலை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தெற்கு காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி உள்ளது.

பெனிசுஹைலா நகரில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த பள்ளிக்கு அருகில் இஸ்ரேல் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 11வயது மற்றும் 8 வயதுடைய இரண்டு சகோதரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

Tags : Deir ,al ,-Balah ,Israel ,Hamas ,Gaza ,southern Gaza… ,
× RELATED கடற்படை முற்றுகையால் போர் பதற்றம்;...