பனாஜி: கோவாவில் உள்ள 50 ஜில்லா பஞ்சாயத்துக்களுக்கும் வருகிற டிசம்பர் 20ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் மெனினோ டிசோசா அறிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் ஆணையர் மெனினோ,கோவாவில் உள்ள 50 ஜில்லா பஞ்சாயத்துக்களுக்கும் டிசம்பர் 20ம் தேதி தேர்தல் நடைபெறும்.
வருகிற 1ம் தேதி(நாளை) முதல் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும். 9ம் தேதி வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி நாளாகும். 10ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். 11ம் தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாளாகும். 22ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்” என்றார்.
