×

கோவையில் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் கொள்ளையடித்துத் தப்பிய 3 பேரை சுட்டுப் பிடித்த போலீசார்!!

கோவை: கோவையில் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் 56 சவரன் நகைகளை கொள்ளையடித்து 3 கொள்ளையர்களை காவல் துறையினர் சுட்டுப் பிடித்தனர். கோவை கவுண்டம் பாளையத்தில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வரியா குடியிருப்பில் 1,800 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 14 மாடிகளை கொண்ட இந்தக் குடியிருப்பில் நேற்று மர்ம நபர்கள் நுழைந்துள்ளனர். பூட்டியிருந்த வீடுகளில் நகை, பணத்தை கொள்ளையடித்துள்ளனர். இது தொடர்பாக ஒருவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது 10க்கும் மேற்பட்ட வீடுகளில் 56 சவரன் நகைகளையும், 3 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் மூலம் குற்றவாளிகளின் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே கொள்ளையில் ஈடுபட்ட 3 கொள்ளையர்கள் குளத்துப்பாளையம் பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. காவல் துறையினர் அங்க விரைந்தபோது கொள்ளையர்கள் காவல்துறையினரை தாக்கி விட்டு தப்ப முயன்றனர். தொடர்ந்து கொள்ளையர்கள் மூவரையும் காவல்துறையினர் சுட்டுப்பிடித்தனர். இதையடுத்து காயமடைந்த கொள்ளையர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Goa ,Tamil Nadu Housing Facility Varia Apartment ,Gowai County Palayam ,
× RELATED கோவை வரைவு வாக்காளர் பட்டியலில் 10...