தாய்லாந்து: தாய்லாந்தில் வரலாறு காணாத பெருமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 145ஆக உயர்ந்துள்ளது. தெற்கு தாய்லாந்தின் சாங்க்லா மாகாணத்தில் மட்டுமே பெருமழை, வெள்ளத்தில் சிக்கி 110 பேர் உயிரிழந்தனர். நாள் கணக்காக விடாமல் பெய்த மழையால் தெற்கு தாய்லாந்தில் பல குடியிருப்புகள் நீரில் மூழ்கின. வீடுகள் மூழ்கியதால் கூரைகளில் தஞ்சமடைந்த மக்களை ஹெலிகாப்டர் மூலம் அந்நாட்டு அதிகாரிகள் மீட்டனர்.
