×

110 வயது மூதாட்டி மரணம்

வேலூர்: வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகே உள்ள தொங்குமலை மலை கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னய்யன் மனைவி குப்பம்மாள்(110). இவர்களுக்கு 3 மகன்கள், 3 மகள்கள் என 6 பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சின்னய்யன் இறந்து விட்டார். இதனால் குப்பம்மாள் தனியாக வசித்து வந்தார். தனக்கு கிடைக்கும் முதியோர் உதவி தொகையை வைத்து வாழ்க்கையை நடத்தி வந்தார்.

கடந்த ஒரு மாதமாகவே உடல் நிலை சரியில்லாமலும், போதிய கவனிப்பு இல்லாமலும் அவதிப்பட்டு வந்த குப்பம்மாள் தனது 110வது வயதில் நேற்று வீட்டில் இறந்து கிடந்தார். இதையறிந்த மகன்கள், மகள்கள் மற்றும் உறவினர்கள் மூதாட்டியின் உடலை நல்லடக்கம் செய்தனர்.

Tags : Vellore ,Chinnayyan ,Kuppammal ,Thongkumalai ,Odugathur ,Vellore district ,
× RELATED பல ஆண்டுகளாக போராடிவரும் ஆசிரியர்கள்...