×

ஓசூர் அருகே ரூ.5 கோடி கேட்டு ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல் வழக்கில் மேலும் 2 பேர் கைது

ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள மாதரசனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சீதாராமன் (34). ரியல் எஸ்டேட் அதிபரான இவரை கடந்த 21ம் தேதி, மர்ம கும்பல் ரூ.5 கோடி பணம் கேட்டு காரில் கடத்திச்சென்றது. பின்னர், அவரை ஒரு வீட்டில் அடைத்து வைத்து, பணம் கேட்டு சித்ரவதை செய்தனர்.

இதுகுறித்து அவரது மனைவி புகார் அளித்தார். கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி தங்கதுரை உத்தரவின் பேரில், ஓசூர் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, கடத்தப்பட்ட சீதாராமனை மீட்டனர். மேலும், இதுதொடர்பாக கடத்தல் கும்பலைச் சேர்ந்த 4 பேரை கைது செய்தனர்.

இந்த கடத்தல் வழக்கில் ஒரு பெண் உள்பட மேலும் 3 பேரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், கடத்தலில் ஈடுபட்ட ஓசூர் அருகே உள்ள சூதாளம் கிராமத்தைச் சேர்ந்த சந்தியா(36), தொடுதேப்பள்ளி கிராமத்தை சேர்ந்த வெங்கடாசலபதி (எ) மோகன் (38) ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 2 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Tags : Hosur ,Sitaraman ,Madarasanapalli ,Osur, Krishnagiri district ,
× RELATED புதுச்சேரியில் ரூ.2 ஆயிரம் கோடி போலி...