சென்னை வியாசர்பாடியில் மெல்வின் என்பவர் தனது காருக்கு பெட்ரோல் நிரப்பியபின், பணம் கொடுத்துவிட்டு திருபிப் பார்ப்பதற்குள் காரைத் திருடிச் சென்ற சூர்யா என்பவர் புழலில் கைது செய்யப்பட்டுள்ளார். கார் கும்மிடிப்பூண்டி சென்று விட்டு மீண்டும் புழல் நோக்கி வருவதை ஜிபிஎஸ் உதவியுடன் கண்டறிந்த போலீசார், திருடனை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
