×

சென்னையில் இருந்து கோவை வந்த ரயிலில் அதிர்ச்சி சட்டக்கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: போலீஸ்காரர் சஸ்பெண்ட்: செல்போனில் வீடியோ எடுத்து சிக்க வைத்தார்

கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தவர் ஷேக் முகமது (38). இவர், பாதுகாப்பு பணிக்காக சென்னை சென்றிருந்தார். பணியை முடித்து கடந்த 20ம் தேதி சென்னை-கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் கோவைக்கு திரும்பி வந்தார். அதே ரயிலில், சென்னையில் உள்ள சட்டக்கல்லூரியில் பயிலும், கோவையை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் பயணம் செய்துள்ளார். ரயில் அரக்கோணம் அருகே வந்து கொண்டிருந்த போது, மாணவியின் அருகில் அமர்ந்திருந்த போலீஸ்காரர் ஷேக் முகமது, பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதை சற்றும் எதிர்பாராத மாணவி, தன்னுடைய செல்போன் மூலம் போலீஸ்காரரின் செயல்களை வீடியோவாக பதிவு செய்து, ரயில்வே போலீஸ் உதவி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் அளித்தார்.

மாணவியின் தகவலை தொடர்ந்து, அரக்கோணம் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் ரயிலில் ஏறி பாலியல் தொல்லை அளித்த போலீஸ்காரரை ரயிலில் இருந்து இறக்கி விசாரணை மேற்கொண்டனர். மாணவியிடம் இருந்து வீடியோ ஆதாரங்கள் மற்றும் புகார் மனுவையும் போலீசார் பெற்றனர். இதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் மீது பாலியல் தொல்லை அளித்ததாக அரக்கோணம் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து, அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து, கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த போலீஸ்காரர் ஷேக் முகமதுவை உடனடியாக சஸ்பெண்ட் செய்து போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவிட்டார். பொதுமக்கள் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட போலீஸ்காரரே இத்தகைய செயலில் ஈடுபட்டது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில், தைரியமாக வீடியோ பதிவு செய்து, புகார் அளித்த மாணவியின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். போலீஸ்காரர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Chennai ,Goa ,KOWAI ,KOWAI R. S. Sheikh Mohammed ,Puram Police Station ,
× RELATED புதுச்சேரியில் ரூ.2 ஆயிரம் கோடி போலி...