ராமநாதபுரம்: ராமநாதபுரம் சட்டக்கல்லுாரி அருகே உள்ள தெற்குவாணி வீதியில் உள்ள பசுபதிபாண்டியன் என்பவருக்குச் சொந்தமான தோப்பில் நேற்று அதிகாலை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது போலீசாரை கண்டதும் 10 கும்பல் தப்பி ஓடியது. அவர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், இலங்கைக்கு கடத்த தோப்பில் ரூ.5 கோடி மதிப்பு உள்ள சுமார் 564 கிலோ கஞ்சா பதுக்கப்பட்டிருப்பது தெரிந்தது. அதை பறிமுதல் செய்த போலீசார் மானாமதுரையை சேர்ந்த விக்னேஸ்வரன் (30), புதுக்கோட்டை சஞ்சீவ் (22), வேதாளை ரஞ்சித் (40), யோகேஸ்வரன் (25), முகேஷ் கண்ணன் (22), பிரகாஷ் (22), கரண்ராஜ் (23), மண்டபம் மீனவர் குடியிருப்பு ஹரிகரன் (19), குமரேசன் (23), வளையர்வாடி பாலகிருஷ்ணன் (19) ஆகிய 10 பேரை கைது செய்தனர்.
