- மாஸ்கோ
- ரஷ்யா
- பைக்கோனூர்
- கஜகஸ்தான்
- கிறிஸ் வில்லியம்ஸ்
- செர்ஜி மிகீவ்
- செர்ஜி குட்-ஸ்வெர்ச்கோவ்
- பூமி...
மாஸ்கோ: கஜகஸ்தானில் உள்ள பைக்கோனூர் ஏவுதளத்தில் இருந்து ரஷ்யாவின் சோயுஸ் பூஸ்டர் ராக்கெட் பிற்பகல் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலத்தில் அமெரிக்காவின் விண்வெளி வீரர் கிறிஸ்வில்லியம்ஸ், ரஷ்யாவை சேர்ந்த செர்ஜி மிகேவ் மற்றும் செர்ஜி குட்-ஸ்வெர்ச்கோவ் ஆகியோர் சென்றுள்ளனர்.
பூமியை சுற்றி வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் அவர்கள் சுமார் 8 மாதங்கள் தங்கியிருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இது வில்லியம்ஸ் மற்றும் விமானி மிகேவ் ஆகியோரின் முதல் விண்வெளிப்பயணம். செர்ஜி குட்-ஸ்வெர்ச்கோவ்விற்கு இது இரண்டாவது விண்வெளி பயணமாகும்.
