சென்னை: தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாட்டில் மத நல்லிணக்கத்திற்காக பாடுபட்டு சிறப்பாக சேவை செய்துவரும் ஒருவருக்கு ஒவ்வொரு ஆண்டும் முதல்வரால், குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது. ரூ.5,00,000 காசோலை, ஒரு பதக்கம் மற்றும் தகுதியுரை ஆகியவை இதில் அடங்கும். மத நல்லிணக்கத்திற்காக சேவை செய்துவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த பதக்கத்தை பெற தகுதியுடையவராவர். பதக்கத்திற்கு தகுதியானவரை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் https://awards.tn.gov.in என்ற இணைய தளம் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். வருகிற 15ம் தேதி கடைசிநாள்.
