×

வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து நாளை முதல் தண்ணீர் திறக்க உத்தரவு!

 

சென்னை: கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து 2025-26 ஆம் ஆண்டு பாசனத்திற்கு 19.12.2025 முதல் 90 நாட்களுக்கு வினாடிக்கு 90 கன அடி வீதம் (ஒரு நாளைக்கு 7.78 மில்லியன் கன அடிக்கு மிகாமல்) 8268 ஏக்கர் பாசன பரப்பு பயன்பெறும் வகையில் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டத்தில் 8268 ஏக்கர் பாசன பரப்பு வசதி பெறும்.

 

Tags : WELLINGTON ,Chennai ,Cuddalore District, Dikkudi Circle, Wellington Reservoir ,
× RELATED பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறக்க உத்தரவு!