- சிஐடி
- திருப்பதி பறக்கமணி
- திருமலா
- தர்ம ரெட்டி
- சிறப்புப் புலனாய்வுப் பிரிவு
- திருப்பதி
- திருப்பதி ஏழுமலையான்
- பரக்கமணி…
திருமலை: திருப்பதியில் பரக்காமணி மோசடி வழக்கில் சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரணைக்கு முன்னாள் செயல் அதிகாரி தர்மா ரெட்டி நேரில் ஆஜரானார். திருப்பதி ஏழுமலையான் கோயில் பரக்காமணியில் உண்டியல் காணிக்கை எண்ணும்போது சுமார் ரூ.100 கோடி வரை மோசடி நடந்ததாக வழக்கு பதியப்பட்டது. இதுகுறித்து ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி கூடுதல் டிஜிபி ரவிசங்கர் அய்யனார் தலைமையில் சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் நேற்றுமுன்தினம் முன்னாள் தலைவர் கருணாகர் ரெட்டியிடம் திருப்பதியில் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் விஜயவாடா சிறப்பு புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் முன்னாள் தேவஸ்தான செயல் அதிகாரியாக இருந்த தர்மா ரெட்டியிடம் நேற்று விசாரணை நடந்தது. அப்போது 4 மணி நேரம் பல்வேறு கேள்விகளோடு விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த விசாரணை அறிக்கையை டிசம்பர் 2ம் தேதி உயர்நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சமர்பிக்க உள்ள நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க உள்ளனர்.
