வெளிநாடுகளில் இருந்து வருவோர் நகை கொண்டு வர அனுமதிக்கும் விதிகளில் திருத்தம் செய்துள்ளனர். மதிப்பு அடிப்படையில் அல்லாமல் எடை அடிப்படையில் தங்கத்தை கொண்டு வரும் வகையில் விதிகளில் திருத்தம் செய்துள்ளது. ஆண்களாக இருந்தால் தலா 20 கிராம், பெண்களாக இருந்தால் தலா 40 கிராம் நகை கொண்டு வர அனுமதித்துள்ளனர். ஓராண்டுக்கு மேல் வெளிநாட்டில் தங்கிவிட்டு இந்தியா திரும்புவோர் நகை கொண்டு வந்தால் சுங்க வரி இல்லை. கடந்த காலங்களில் ரூபாய் மதிப்பில் ரூ.1 லட்சத்தில் நகை கொண்டு வரலாம் என விதிகள் இருந்தன. 40 கிராமுக்கு அதிகமாக தங்கம் கொண்டு வருவோர் 9% வரி செலுத்த வேண்டும்.
