×

புழக்கத்தில் இருந்த 98.42 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திருப்பி அளிக்கப்பட்டது: ரிசர்வ் வங்கி தகவல்

 

மும்பை: ரிசர்வ் வங்கி கடந்த 2023, மே 19ம் தேதி, ரூ.2,000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்தது. இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், 2023, மே 19ம் தேதி, ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. அவை திரும்ப பெறுவதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து 2026, ஜன.31ம் தேதி நிலவரப்படி ரூ.5,609 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன. இதன்மூலம் 98.42 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திருப்பி அளிக்கப்பட்டுள்ளன.

2023, அக்.7 முதல் நாடு முழுவதும் உள்ள ரிசர்வ் வங்கியின் அனைத்து கிளைகளிலும் ரூ.2,000 நோட்டுகளை வங்கி கணக்கில் செலுத்த அல்லது மாற்றி கொள்வதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2023, அக். 9 முதல் ரிசர்வ் வங்கியின் 19 அலுவலகங்களிலும் ரூ.2,000 நோட்டுகள் பெறப்பட்டு வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது. தவிர அஞ்சல் வழியாக பொதுமக்கள் அனுப்பும் ரூ.2,000 நோட்டுகளும் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது.

Tags : Reserve Bank of India ,RBI ,Mumbai ,
× RELATED மேற்கு வங்கத்தில் பூமிக்கடியில் ரயில் பாதை: அஸ்வினி வைஷ்ணவ் தகவல்