×

எஸ்ஐஆரை எதிர்த்து வைகோ வழக்கு: தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: கடந்த 4ம் தேதி முதல் தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ‘வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள்’ நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சியினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ள நிலையில் மதிமுக தரப்பிலும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அப்போது மனு மீது பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் பிறப்பித்து வழக்கை தலைமை நீதிபதி அமர்வு ஒத்தி வைத்தது. தமிழ்நாட்டைச் சேர்ந்த திமுக உள்ளிட்ட பிற கட்சிகள் தொடர்ந்து வழக்குகளோடு இந்த மனுவும் இணைத்து விசாரிக்கப்படும் என தலைமை நீதிபதி தெரிவித்தார். அப்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான வழக்கின் விசாரணை நாளை பட்டியலிடப்பட்டுள்ள நிலையில் அதனோடு இணைத்து இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

அதற்கு தலைமை நீதிபதி அமர்வு நாளை கேரளா மாநில எஸ்.ஐ.ஆர் விவகாரங்கள் தொடர்பாக விசாரணை நடைபெற இருக்கிறது. கேரளா விவகாரம் வேறு தமிழக விவகாரம் வேறு என்பதால் மதிமுக தொடர்ந்து உள்ள வழக்கை டிசம்பர் 2ம் தேதி விசாரணைக்கு எடுப்போம் என கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.

Tags : Vaiko ,SIR ,Supreme Court ,Election ,Commission ,New Delhi ,Tamil Nadu ,
× RELATED 5 மாநிலங்களில் காலியாகும் 75 மாநிலங்களவை இடங்கள்