×

தாய், மகனை தாக்கியவர் கைது

வடமதுரை, நவ. 25: வடமதுரை அருகே உள்ள கொல்லப்பட்டியை சேர்ந்தவர் பாண்டீஸ்வரன் (34). இவர் பால்வேன் வைத்து ஓட்டி வருகிறார். இவரிடம் மோர்பட்டி மேற்கு தெருவை சேர்ந்த ஐயப்பன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் ஐயப்பன், பாண்டீஸ்வரனின் வீட்டிற்கு சென்று தனது சம்பள பாக்கியை தருமாறு கேட்டுள்ளார். அப்போது பாண்டீஸ்வரன் கணக்கு வழக்கு பார்த்து பின்னர் தருவதாக கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஐயப்பன், பாண்டீஸ்வரன் மற்றும் அவரது தாய் பஞ்சவர்ணம் (54) ஆகிய இருவரையும் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த இருவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். இதுகுறித்த புகாரில் வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஐயப்பனை கைது செய்து விசாரிக்கின்றனர்.

கஞ்சா விற்றவர் கைது
வடமதுரை அருகே உள்ள தென்னம்பட்டி பெட்ரோல் பங்க் பகுதியில் வடமதுரை போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது விற்பனைக்கு கஞ்சா பாக்கெட்டை மறைத்து வைத்திருந்த மொட்டணம்பட்டியைச் சேர்ந்த வேல்முருகன் (28) என்பவரை போலீசார் கைது செய்து, அவர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

 

Tags : Vadamadurai ,Pandeeswaran ,Kottayam ,Ayyappan ,Morpatti West Street ,
× RELATED உக்கிரன்கோட்டையில் கிடப்பில் போடப்பட்ட சாலை