×

மனைவியை அரிவாளால் தாக்கிய கணவர் மீது வழக்கு

திருச்சி, டிச.17:மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். திருச்சி அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் அண்ணா நகரைச் சேர்ந்தவர் ஜான் பீட்டர்(41). இவரது மனைவி நான்சி (29). இவர்களுக்கு 2 குழந்தைகள். இவரது மனைவி அருகிலுள்ள கடையில் வேலை பாத்து வந்த நிலையில், டிச.11ம் சம்பளத்துடன் வீட்டிற்கு வந்தார். அப்போது, சம்பளத்தைப் பெற்றுக்கொண்ட கணவர், கடனை திருப்பிச் செலுத்தி விட்டு பின்னர் மீதமுள்ள தொகையை மது அருந்தியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் கணவன் மனைவியை அரிவாளால் வெட்டியதாக தெரிகிறது. இதில் முகம், தலை மற்றும் மூக்கில் காயம் அடைந்த அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து மனைவி அளித்த புகாரின் பேரில் பொன்மலை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து கணவர் ஜான் பீட்டரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Trichy ,John Peter ,Ambikapuram, ,Anna Nagar, Ariyamangalam, Trichy ,Nancy ,
× RELATED இண்டிகோ நிறுவனம் ஏர்பஸ் ஜெட் சேவையை தொடர்ந்து நீட்டிக்க வேண்டும்