×

துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு மூன்றாம் பருவ திறனறி புத்தகம் தயார்

 

ஈரோடு,நவ.25: ஈரோடு மாவட்டத்தில் எண்ணும் எழுத்தும் 3ம் பருவ திறனறி புத்தகம் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்குவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு,அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை பள்ளிகளில், 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு படிக்கும் மாணவ- மாணவிகள் கல்வி ஆர்வத்தை மேம்படுத்த எண்ணும் எழுத்தும் என்ற பயிற்சி புத்தகம் தயாரிக்கப்பட்டு பருவம் வாரியாக வழங்கப்படுகிறது. இந்த எண்ணும் எழுத்தும் திட்டத்தின்படி,1ம் வகுப்பு முதல் 3ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, தமிழ், ஆங்கிலம், கணித புத்தகமும்,4ம் வகுப்பு மற்றும் 5ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு,தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடப்புத்தகமும் வழங்கப்படும். மேலும் இதை எவ்வாறு கற்பிப்பது என்பது குறித்த ஆசிரியர்களுக்கான கைப்புத்தகமும் தயாரித்து வழங்கப்படுகிறது.

அந்த வகையில், ஈரோடு மாவட்டத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கான மூன்றாம் பருவ எண்ணும், எழுத்தும் திறனறி புத்தகம் நேற்று ஈரோடு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி அலுவலகத்துக்கு வந்துள்ளது. இவை விரைவில் அந்தந்த வட்டாரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.இதேபோன்று, 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கான எண்ணும், எழுத்தும் திறனறி பயிற்சி கையேடும் வந்துள்ளது.  வாழ்க்கை முறை மாற்றத்தால் தவிக்கும் இளையதலைமுறை உலக அளவில் அதிகரித்து வரும் சுகாதார சவால்களில் ஒன்றாக நீரிழிவு உருவெடுத்துள்ளது. இதுபற்றி அறிந்து கொள்வது, வராமல் தடுப்பது மற்றும் வந்தால் கட்டுக்குள் வைத்திருப்பது பற்றி விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் நீரிழிவு நோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

1921ம் ஆண்டு சார்லஸ் பெஸ்டுடன் சேர்ந்து இன்சுலினை கண்டுபிடித்த சர் பிரடெரிக் பாண்டிங்கின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக உலக நீரிழிவு நோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அவர்களின் கண்டுபிடிப்பு நீரிழிவு நோயை ஒரு கொடிய நோயிலிருந்து நிர்வகிக்கக்கூடிய நிலையாக மாற்றியது. உலகளவில் கோடிக்கணக்கான மக்களின் உயிர்களை காப்பாற்றி வருகிறது. நீரிழிவு நோய் வராமல் தடுப்பது குறித்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையின் மருத்துவர் அப்ரீன் ஷபீர் கூறியதாவது: இதய நோய், நரம்பு பாதிப்பு, சிறுநீரக செயலிழப்பு அல்லது பார்வை பிரச்னைகள் போன்ற சிக்கல்கள் உருவாகும் வரை பலருக்கு நீரிழிவு நோய் இருப்பது தெரியாது. இந்த பிரச்னைகளை தடுக்க ஆரம்பகால நோயறிதல் மிக முக்கியம் ஆகும். அதற்கு வழக்கமான மருத்துவ பரிசோதனைகள், சீரான உணவு முறை மற்றும் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை எடுத்துக் கொள்ளுதல் போன்றவை ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும்.

டைப் 1 நீரிழிவு நோயை தடுக்க முடியாது என்றாலும், ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள் மூலம் டைப் 2 நீரிழிவு நோயை தவிர்க்கலாம் அல்லது தாமதப்படுத்தலாம். சத்தான உணவை உட்கொள்வது, தினசரி உடற்பயிற்சி, உடல் எடை பராமரிப்பு மற்றும் அதிகப்படியான சர்க்கரை உட்கொள்வதை தவிர்ப்பது போன்ற எளிய நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். மிகுந்த கவனமுடன் நீரிழிவு நோயை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும். அதற்கு குடும்பத்தினர், டாக்டர்கள் மற்றும் சமூகத்தின் ஆதரவு மிக முக்கியமானது. அதற்கு குறைந்த விலையில் இன்சுலின், வழக்கமான குளுக்கோஸ் கண்காணிப்பு மற்றும் நீரிழிவு பராமரிப்பு பற்றிய சரியான விழிப்புணர்வு அனைவருக்கும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். உலக நீரிழிவு தினத்தின் முக்கிய நோக்கம் பராமரிப்பு மற்றும் விழிப்புணர்வை மேம்படுத்துவதற்காக நடத்தப்படுகிறது. தனிநபர்கள் மற்றும் குடும்பங்கள் முதல் சுகாதார அமைப்புகள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் வரை அனைவருக்கும் பங்கு உண்டு என்பதை இது நினைவூட்டுகிறது.

இதுபற்றி விழிப்புணர்வை பரப்புதல், ஆரோக்கியமான பழக்கங்களை அனைவரிடத்திலும் ஊக்குவித்தல் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளித்தல் மற்றும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால், நீரிழிவு நோயை நன்கு புரிந்துகொள்ளவும், நிர்வகிக்கவும், தடுக்கவும் கூடிய ஒரு உலகத்தை நம்மால் உருவாக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார். நீரிழிவு நோய் குறித்தும், தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்தும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் டாக்டர் பவித்ரா தமிழரசன் கூறியதாவது: நீரிழிவு நோய் என்பது ஒரு நாள்பட்ட வளர்சிதை மாற்ற பிரச்னையாகும். இதில், உடல் போதுமான இன்சுலினை உற்பத்தி செய்யாது அல்லது உற்பத்தி செய்யும் இன்சுலினை திறம்பட பயன்படுத்த முடியாத நிலையாகும். உணவில் இருந்து குளுக்கோஸை உடலுக்கு தேவையான ஆற்றலாக மாற்ற உதவுகிறது. இந்த சமநிலை பாதிக்கப்படும்போது, ரத்த சர்க்கரை அளவுகள் உயர்ந்து, நீண்டகால உடல்நல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.

டைப் 1 நீரிழிவு, இது கணையம் இன்சுலின் உற்பத்தி செய்வதை நிறுத்தும் ஒரு தன்னுடல் தாக்க நிலை ஆகும். டைப் 2 நீரிழிவு என்பது உடல் பருமன், மோசமான உணவுமுறை மற்றும் உட்கார்ந்த நிலையிலான பணி ஆகியவற்றின் காரணமாக ஏற்படுகிறது. 3வதாக கர்ப்பகால நீரிழிவு என்பது கர்ப்ப காலத்தில் ஏற்படுகிறது. பின்னர் டைப் 2 நீரிழிவாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது. நோய் பாதித்த அனைவருக்கும் குறைந்த விலையில் இன்சுலின், நோயறிதல் கருவிகள் மற்றும் விழிப்புணர்வின் அவசியத்தை எடுத்துக்காட்டும் விதமாக இந்த ஆண்டு உலக நீரிழிவு தினம் ‘நீரிழிவு பராமரிப்பை பரவலாக்குவோம்’ என்ற தலைப்பில் கடைபிடிக்கப்படுகிறது. அதிக காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் அதிக கொழுப்பு இல்லாத இறைச்சி உணவுகளை எடுத்துக் கொள்வதோடு சர்க்கரை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகளை தவிர்த்திடுங்கள்.

தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் விறுவிறுப்பான நடைபயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்யுங்கள், உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதிக அளவில் சிகரெட் பிடிப்பது மற்றும் மது குடிப்பத்தை தவிர்த்திடுங்கள். குடும்பத்தில் யாருக்கேனும் நீரிழிவு நோய் இருந்தால், வழக்கமான மருத்துவ பரிசோதனைகளை செய்து கொள்ளுங்கள். நீரிழிவு நோய் வந்த ஒருவருக்கு அது அவரது வாழ்நாள் முழுவதும் இருக்கும். ஆனால் அது குறித்து பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு முறையாக மருத்துவ சிகிச்சை பெற்று அதை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்போது அதனால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. ஆரோக்கியமான எதிர்காலத்தை நோக்கிய பயணத்தின் அடையாளப்பூர்வமாக ஒரு அடி எடுத்து வைப்போம், நோயின்றி மகிழ்ச்சியாக வாழ்வோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.அலுவலக பணியாளர்கள், ஐடி ஊழியர்கள் மற்றும் உட்கார்ந்த நிலையில் பணிபுரியும் நிபுணர்களுக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையின் டாக்டர் அஸ்வின் கருப்பன் கூறியதாவது: கம்ப்யூட்டரை ஆப் செய்த உடனே 10 நிமிட நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.

இது உங்கள் இரவு உணவை ஜீரணிக்கவும், சர்க்கரை அளவைக் குறைக்கவும் உதவுகிறது. வேலைக்குப் பிறகு ஆன்லைனில் உணவை ஆர்டர் செய்வதை தவிர்க்கவும், எளிய உணவுகளை வீட்டில் சமைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது. நிம்மதியான தூக்கத்திற்கு மாலை 6 மணிக்கு பிறகு காபி போன்ற பானங்களை குடிப்பதை தவிர்க்கவும். சோபாவில் உட்காருவதற்கு முன் உங்கள் உடலை நீட்டவும், லேசான நீட்சிகள் கூட ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். அதிக நேரம் டிவி பார்ப்பதற்கு பதிலாக உங்கள் குடும்பத்தினருடன் வெளிப்புற விளையாட்டுகளில் ஈடுபடுங்கள். இரவு உணவிற்குப் பிறகு வேலை செய்யாதீர்கள். அலுவலக பணியை வீட்டில் வந்து செய்யாதீர்கள். தாவரங்களுக்கு தண்ணீர் ஊற்றுவது, செல்லப்பிராணிகளை நடைபயிற்சிக்கு அழைத்து செல்வது அல்லது 15 நிமிட யோகா ஆகியவற்றை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இரவு உணவை சீக்கிரமாக சாப்பிடுங்கள்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

Tags : Erode ,Tamil Nadu ,
× RELATED குழாய் வழி இயற்கை காஸ் பெற பதிவு செய்ய அறிவுறுத்தல்: மாவட்ட கலெக்டர் தகவல்