கோபி,மார்ச்31: கோபி அருகே தாயின் மருத்துவ செலவிற்கு கொண்டு செல்லப்பட்ட 51,700 ரூபாயை உரிய ஆவணம் இல்லாததால் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். கோபி அருகே உள்ள நம்பியூர் சுண்டக்காம்பாளையத்தை சேர்ந்தவர் தர் (32). இவரது தாயாருக்கு உடல் நிலை சரியில்லாத நிலையில் கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
தாயின் மருத்துவ செலவிற்காக கொடிவேரியை சேர்ந்த வாழை வியாபாரியிடம் இருந்து ரூ.51,700 கடனாக பெற்றுக் கொண்டு பைக்கில் சென்றார்.
உடையாக்கவுண்டன்பாளையம் என்ற இடத்தில் தேர்தல் பறக்கும்படையினர் சோதனையில் தரிடம் உரிய ஆவணம் இல்லாமல் இருந்த 51,700 ரூபாயை பறிமுதல் செய்தனர். தாயின் மருத்துவ செலவிற்காக கொண்டு சொல்லப்படும் பணம் என்பதை ஸ்ரீதர் விளக்கியும் அதை ஏற்றுக்கொள்ளாத அதிகாரிகள், பணத்தை பறிமுதல் செய்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்
தனர்.
